மட்டக்களப்பு – ஏறாவூர் பிரதேசத்தில் பெண் ஒருவர் இரண்டு கூரிய வாள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலையடுத்து, நேற்று முன்தினம் (09.11.2025) ஏறாவூர் முதலாம் பிரிவிலுள்ள மையவாடி வீதி மீராகேன் பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றை பொலிஸார் சுற்றிவளைத்து முற்றுகையிட்டுள்ளனர்.
இதன்போது, அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு கூரிய வாள்கள் மீட்கப்பட்டதுடன் 41 வயதுடைய பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கணவர் ஏற்கனவே விளக்கமறியலில்
இந்நிலையில், அவரை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, குறித்த பெண்ணின் கணவர் ஏற்கனவே போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
