Home இலங்கை சமூகம் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட 14 வயது மாணவன் : பெண்ணொருவர் கைது

வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட 14 வயது மாணவன் : பெண்ணொருவர் கைது

0

கற்பிட்டி கண்டக்குளி வெல்ல பகுதியில் 14 வயதுடைய மாணவனை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தநிலையில், 54 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக கற்பிட்டி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வெளிப்பிரதேச பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் குறித்த மாணவன் பாடசாலை விடுமுறையில் தனது வீட்டுக்கு வந்திருந்த நிலையில் இந்த அனர்த்தத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.

மேலதிக விசாரணை

பாதிக்கப்பட்ட மாணவன் செய்த முறைப்பாட்டுக்கு அமைய சத்தேக நபரான பெண்ணை கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரான குறித்த பெண் பாதிக்கப்பட்ட அந்த மாணவனின் உறவினர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் மாணவர் மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இந்த சம்பவம் தொடர்பில் கற்பிட்டி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/woman-arrested-for-abusing-student-1724063114

NO COMMENTS

Exit mobile version