Home இலங்கை சமூகம் கடற்றொழிலாளர்களது பிரச்சினை குறித்து மட்டக்களப்பில் விசேட கலந்துரையாடல்

கடற்றொழிலாளர்களது பிரச்சினை குறித்து மட்டக்களப்பில் விசேட கலந்துரையாடல்

0

கடற்றொழிலாளர்களுடைய பிரச்சனைகளை நாட்டின் அரசாங்கம் ஏற்றுக் கொண்டிருக்கின்ற போதும் அதை
நடைமுறைப்படுத்தவில்லை அதை நடைமுறைப்படுத்துவதற்காக நாம் செயற்பட வேண்டும் என
தேசிய கடற்றொழிலாளர் ஒத்துழைப்பு இயக்கத்தின் தலைவர் ஹேமன்குமார தெரிவித்துள்ளார்.

தேசிய கடற்றொழிலாளர் ஒத்துழைப்பு இயக்கம் மற்றும் கடற்றொழிலாளர் சம்மேளங்களின்
உறுப்பினர்களுடன் மட்டக்களப்பில் ஊடக சந்திப்பொன்று நடைபெற்றது.

இதனபோது, கருத்து வெளியிடுகையிலேயே தேசிய கடற்றொழிலாளர் ஒத்துழைப்பு இயக்கத்தின் தலைவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

கடற்றொழிலாளர் சமூகத்தின் வாழ்வாதாரம் 

அவர் மேலும் தெரிவிக்கையில், 

“இன்று இலங்கையிலுள்ள கடற்றொழிலாளர் சமூகத்தின்
வாழ்வாதாரம் மிகவும் பாரதூரமான முறையில் பாதிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் வாழ்வாதாரத்தை கொண்டு செல்வதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

இந்த விடயங்கள் தொடர்பாக கடற்றொழிலாளர் சங்கங்களும், அமைப்புகளும் முக்கிய பங்காற்றி
வருகின்றது.

ஆகவே, இந்த கலந்துரையாடலை மேற்கொள்வதன் பிரதான நோக்கம்
கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டத்தில்
உள்ள கடற்றொழிலாளர்கள் அவர்களுடைய உரிமைகளுக்காக கிழக்கு மாகாணத்தில் பாரிய சங்கமாக
உருவாக்குவதற்கு தேசிய கடற்றொழிலாளர் ஒத்துழைப்பு இயக்கம் என்ற ரீதியில் எங்களது
ஒத்துழைப்பினை வழங்குவோம்.

வட மாகாணத்தில் கடற்றொழிலாளர் சங்கம் ஒன்றை அமைத்துள்ளோம்.

அது போன்று கிழக்கு மாகாணத்திலும் ஒரு கடற்றொழிலாளர் சங்கத்தினை அமைத்து வடக்கு கிழக்கு தெற்கு என்று
ஒட்டுமொத்தமாக தேசிய கடற்றொழிலாளர் சங்கம் ஒன்றை அமைத்து, இதன் ஊடாகபலம் மிக்க ஒரு
சக்தியாக மாறுவதே இதன் நோக்கம்.”என அவர் குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version