Home இலங்கை சமூகம் தற்காலிகமாக மூடப்பட்ட ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் மீள்திறப்பு

தற்காலிகமாக மூடப்பட்ட ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் மீள்திறப்பு

0

இரு மாணவர் குழுக்களிடையே ஏற்பட்ட முரண்பாடு காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 24ஆம் திகதி கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறக்கப்படும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, விடுதியில் தங்கும் மாணவர்கள் செப்டெம்பர் மாதம் 23ஆம் திகதி முதல் தங்களுடைய விடுதிகளுக்கு திரும்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த11ஆம் திகதி இரவு, இரு கட்சிகளை சார்ந்த மாணவர்களிடையே இடம்பெற்ற மோதல் காரணமாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தை தற்காலிகமாக மூடுவதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுத்திருந்தது. 

மாணவர்களிடையே முரண்பாடு 

சம்பவத்தின் போது, இப்பல்கலைக்கழத்தில் முகாமைத்துவ பீடத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் குழுவுக்கும் கலைப் பீடத்தைச் சேர்ந்த மாணவர்கள் குழுவுக்குமிடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து பல்கலைக்கழகத்தில், நடைபெறவிருந்த கலை விழாவிற்கு இடையூறு ஏற்படுத்தும் நோக்கிலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

இதனை தொடர்ந்து, குறித்த மோதல் காரணமாக கடந்த 12ஆம் திகதி முதல் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களின் கல்வி நடவடிக்கைகளும் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் அறிக்கையொன்றினூடாக அறிவித்திருந்தார். 

இந்நிலையிலேயே, தற்போது பல்கலைக்கழகம் கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version