Home இலங்கை குற்றம் கிளிநொச்சியில் 20 கிலோ கஞ்சாவுடன் பெண் ஒருவர் கைது

கிளிநொச்சியில் 20 கிலோ கஞ்சாவுடன் பெண் ஒருவர் கைது

0

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரமந்தனாறு பகுதியில் 20 கிலோ கேரளா கஞ்சாவினை வைத்திருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறப்பு அதிரடிப்படையினருக்கு இன்று(25.04.2025) கிடைக்கப்பெற்ற தகவலுக்கு
அமைவாக சிறப்பு அதிரடி படையினர் மேற்கொண்ட சோதனையின் போதே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பிரமந்தனாறு பகுதியில் இருந்த வீடொன்றின் உரிமையாளரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் தடையப் பொருட்களை நாளையதினம்(26.04.2025) கிளிநொச்சி நீதிமன்றத்தில் முற்படுத்த தர்மபுரம் பொலிஸார்
நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 25

Source: https://tamilwin.com/article/woman-arrested-with-20-kg-of-ganja-in-kilinochchi-1745601148

NO COMMENTS

Exit mobile version