வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள பிறைந்துறைச்சேனை பகுதியில் போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பெண் வியாபாரியொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நேற்றையதினம்(5) இரவு போதை பொருள்
வியாபாரி ஒருவரின் வீட்டை முற்றுகையிட்ட போதே 2 கிராம்
330 மில்லிக்கிராம் ஹரோயின் போதைப் பொருளுடன் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
மாவட்ட குற்ற புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து பொலிஸார் பிறைந்துறைச்சேனை பிரதேசத்திலுள்ள போதை பொருள் வியாபாரியின் வீட்டை
சுற்றிவளைத்து முற்றுகையிட்டனர்.
இதில் கைது செய்யப்பட்டவர் 45 வயதுடையவர் எனவும் இவர் நீண்டகாலமாக போதை பொருள்
வியாபாரத்தில் ஈடுபட்டுவந்துள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.
இவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த
நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
