யாழில் (Jaffna) 20 நாட்கள் தொடர் சுகயீனத்தால் பீடிக்கப்பட்ட குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்வமானது நேற்றைய தினம் (28) இடம்பெற்றுள்ளது.
நாரந்தனை மத்தி, ஊர்காவற்துறை பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய அன்னலட்சுமி நடராசா (Annalakshmi Natarasa) என்ற ஏழு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் கிளிநொச்சியிலுள்ள அவரது மகள் வீட்டில் இருந்த வேளை கடந்த ஏழாம் திகதி சுகயீனம் ஏற்பட்டதால் கிளிநொச்சி (Kilinochchi) வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளார்.
இடையிடையே சுகயீனம்
குறித்த பெண் கிளிநொச்சியிலுள்ள அவரது மகள் வீட்டில் இருந்த வேளை கடந்த ஏழாம் திகதி சுகயீனம் ஏற்பட்டதால் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளார்.
இருப்பினும், இடையிடையே சுகயீனம் ஏற்பட்டதையடுத்து 17ஆம் திகதி ஊர்காவற்துறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளார்.
இதனை தொடர்ந்தும் சுகயீனம் ஏற்பட்ட நிலையில் 19 ஆம் திகதி ஊர்காவற்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பின்னர் 27ஆம் திகதி மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று (28) காலை உயிரிழந்துள்ளார்.
மேலும், அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் (Namasivayam Biremkumar) மேற்கொண்டுள்ளதுடன் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.