Home இலங்கை சமூகம் யாழில் கிணற்றில் தவறி வீழ்ந்து பெண் ஒருவர் உயிரிழப்பு!

யாழில் கிணற்றில் தவறி வீழ்ந்து பெண் ஒருவர் உயிரிழப்பு!

0

யாழ்ப்பாணம்-அனலைதீவு பகுதியில் நீர் நிறைந்த கிணற்றில் தவறி வீழ்ந்து பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று (12) மாலை 5.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அனலைதீவு, வட்டாரம் 5 இல் வசிக்கும் ஜஹா சுப்பையா நளினி என்பவரே  சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். 

மேலதிக விசாரணை

அத்துடன் இந்த சம்பவம் தொடர்பில் உறவினரால் ஊர்காவற்றுறை பொலிஸ்
நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் தொடரும் அசாதாரண வானிலையை தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக
மக்கள் பல்வேறு அவலங்களை சந்தித்துவரும் நிலையில் நீர் நிலைகளும் நிரம்பி
இருக்கின்ற சூழலில் இவ்வாறு நிகழ்ந்த சம்பவம் குறித்த பகுதியில் பெரும்
சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதேநேரம் தகவலின் அடிப்படையில் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை
ஊர்காவற்றுறை பொலிஸார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version