பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2, கூட்டுக் குடும்பம் அப்படினா இதுதாண்டா என இன்றைய தலைமுறையினருக்கு காட்டும் ஒரு தொடராக உள்ளது.
1000 பொய் சொல்லி ஒரு திருமணத்தை நடத்தலாம் என்ற பழமொழிக்கு ஏற்ப இந்த தொடரில் மயில் என்பவர் பாண்டியன் வீட்டிற்கு திருமணம் செய்து வந்துள்ளார்.
ஜாதகத்தில் தோஷம் இருப்பதை மறைத்து, இரண்டு வயது பெரியவர், படிப்பு விஷயம், நகை விஷயம் என தொடர்ந்து பொய்யாக அடிக்கி மயிலை அவரது அம்மா-அப்பா திருமணம் செய்து வைத்துள்ளனர்.
அந்த உண்மை இப்போது குடும்பத்தினருக்கு தெரியவர எல்லோரும் சேர்ந்து மயில் குடும்பத்தை கிழி கிழி என கிழித்துவிட்டார்கள்.
திடீரென தற்கொலை செய்துகொண்ட சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை… பரபரப்பு தகவல்
அடுத்து என்ன
இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட வீடியோவை விஜய் டிவி இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.
அதில் மயிலை வீட்டைவிட்டு வெளியே அனுப்பும் காட்சி இடம்பெறுகிறது. அதோடு படப்பிடிப்பில் நடிகர்கள் செய்யும் கலாட்டாக்களும் காட்டப்படுகிறது.
