காவல்துறை உத்தியோகத்தர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்த மற்றும் கலகம் விளைவிக்கும் வகையில் நடந்துகொண்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பெண் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அதன்படி, அவரை எதிர்வரும் 10 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபரை கம்பஹா நீதவான் நீதிமன்றில் இன்று (03) முன்னிலைப்படுத்தியதன் பின்னர், நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்
இவ்வாறு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர் 46 வயதான தெமட்டகொடை பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஆவார்.
மோட்டார் வாகனத்தில் பயணித்த குறித்த பெண்ணை போக்குவரத்து விதிமீறல் தொடர்பில் நிறுத்துவதற்கு காவல்துறை உத்தியோகத்தர்கள் முயற்சித்த போது, அவர் காவல்துறை கட்டளையை மீறி காரை செலுத்திச் சென்றுள்ளார்.
இந்த நிலையில் காவல்துறை உத்தரவைம் மீறி காரை செலுத்திச் சென்றதையடுத்து கடந்த சனிக்கிழமை (01) குறித்த பெண் மினுவாங்கொடை பிரதேசத்தில் வைத்து காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டார்.
அத்துடன் குறித்த பெண் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபரான ரன்மல் கொடிதுவக்குவின் சகோதரி இல்லை எனவும் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
https://www.youtube.com/embed/q56OAF9_fWc
