கிளிநொச்சி பளை, வேம்படிக்கேணியில் அமைந்துள்ள கிணற்றில் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
துர்நாற்றம் வீசுவதை அறிந்து இன்று காலை 09..00 மணியளவில் அயலவர்களால்
குறித்த கிணறு அவதானிக்கப்பட்டது.
குறித்த கிணற்றை பிரதேசவாசிகள் பரிசோதித்த போது, கிணற்றில் பெண் ஒருவர்
சடலமாக காணப்பட்டதை அடுத்து, பிரதேசவாசிகள் இது தொடர்பில் பளை பொலிஸாருக்கு
அறிவித்தனர்.
பொலிஸார் விசாரணை
சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸாரால் சடலமாக காணப்படும் பெண் அதே பகுதியை
சேர்ந்த ஆசிரியையான 54 வயதுடைய தவராசசிங்கம் சரஸ்வதியென அடையாளம்
காணப்பட்டுள்ளது.
மேலும், பளை பொலிஸார் சடலத்தை மீட்டு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
