Home இலங்கை அரசியல் யாழில் வேட்பாளர் பட்டியலில் வந்த பெண்ணின் பெயர்: தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

யாழில் வேட்பாளர் பட்டியலில் வந்த பெண்ணின் பெயர்: தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

0

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் யாழ்.தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும்
சுயேட்சை குழுவொன்று தனக்கு தெரியாமல் தன்னுடைய பெயரை வேட்பாளர் பட்டியலில்
குறிப்பிட்டுள்ளதாக பெண்ணொருவர் தேர்தல் ஆணைக்குழுவிடம் (Election Commission) முறைப்பாடு
செய்துள்ளார்.

குறித்த முறைப்பாடானது யாழ்ப்பாண உதவி தேர்தல் ஆணையாளரிடம் நேற்றைய தினம் (12) செவ்வாய்க்கிழமை பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தெரிவித்துள்ள அவர்,

“சுயேட்சை குழுவொன்று தன்னுடைய அனுமதி இன்றி , வேட்பாளர் பட்டியலில் எனது பெயரை
குறிப்பிட்டுள்ளனர்.

வேட்பாளர் பட்டியல்

இதுவரை காலமும் எனக்கு இந்த விடயம் தெரியவரவில்லை.

திங்கட்கிழமை எனது மாணவி ஒருவர் எனக்கு தொலைபேசி
அழைப்பினை எடுத்து , தேர்தலில் போட்டியிடுகிறீர்களா? என வினாவிய போதே , எனது
பெயர் வேட்பாளர் பட்டியலில் வந்திருந்தமை தெரியவந்தது.

அதனை உறுதிப்படுத்திக்கொள்ள யாழ் . மாவட்ட தேர்தல் திணைக்கள அலுவலகத்திற்கு
சென்றபோது அது என்னுடைய பெயர் தான் என்பதனையும் எனது
அனுமதியின்றி எனது பெயரை வேட்பாளர் பட்டியலில் சுயேட்சை குழு தலைவர்
உள்ளடக்கி உள்ளார் என்பதனையும் உறுதிப்படுத்திக்கொண்டேன்.

அது தொடர்பில் யாழ் . மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளரிடம் எழுத்து மூலம்
முறையிட்டுள்ளேன்” என தெரிவித்தார்.

NO COMMENTS

Exit mobile version