Home இலங்கை சமூகம் தொடருந்தில் பயணித்த பெண் திடீரென சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதி

தொடருந்தில் பயணித்த பெண் திடீரென சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதி

0

தொடருந்து நிலைய அதிபர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக சன நெரிசலுடன் பயணித்த தொடருந்தில் இருந்த பெண் ஒருவர் திடீரென சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு கோட்டையிலிருந்து பொல்கஹவல நோக்கிச்சென்ற தொடருந்தில் பயணித்த  53 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு சுகயீனமுற்றுள்ளார்.

கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதி

இந்த பெண் தொடருந்தில் பயணித்துக்கொண்டிருக்கும் போது சன நெரிசல் காரணமாக சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டு திடீரென சுகயீனமுற்றுள்ளார்.

இதனையடுத்து இவர் கம்பஹா தொடருந்து நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு பின்னர் அங்கிருந்து அம்பியுலன்ஸ் மூலம் கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சைப்பெற்று மீண்டும் வீடு திரும்பியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

 

NO COMMENTS

Exit mobile version