Home இலங்கை சமூகம் தென்னிலங்கையில் பதற்றம் : பெண்ணொருவர் கூறிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை

தென்னிலங்கையில் பதற்றம் : பெண்ணொருவர் கூறிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை

0

களுத்துறை (Kalutara)  ஹொரணை (Horana), மேவன பலான பகுதியில் பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக ஹொரணை தலைமையக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தாக்குதல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், இரு குடும்பங்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறு முற்றிய நிலையிலேயே குறித்த பெண் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

காவல்துறை விசாரணை

தாக்குதலுக்குள்ளான 42 வயதுடைய பிரதீபிகா குமாரி என்ற பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பான விசாரணைகளை பாணந்துறை (Panadura) குற்றத்தடுப்பு ஆய்வுகூட அதிகாரிகள் மேற்கொள்ளவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், தாக்குதல் நடத்தியவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இதுவரை குறித்த நபர் கைது செய்யப்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version