Home இலங்கை சமூகம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுற்றிவளைக்கப்பட்ட பணிப்பெண்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுற்றிவளைக்கப்பட்ட பணிப்பெண்

0

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இரத்தினக்கல் வர்த்தகர் ஒருவரின் 13 லட்சம் ரூபா பெறுமதியான பொதியை திருடிய வீட்டுப் பணிப்பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (03) இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், தெஹிவளை – களுபோவில பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட 34 வயதுடைய மாணிக்கக்கல் வர்த்தகர் ஒருவரின் பொதியே இவ்வாறு களவாடப்பட்டுள்ளது.

இலட்சம் ரூபா பெறுமதி

இந்த பொதியில் சுமார் ஆறு இலட்சம் ரூபா பெறுமதியான மாணிக்க கற்கள், வெற்று இரத்தின பொதி பெட்டிகள், வர்த்தகரின் ஆடைகள், வாசனை திரவியங்கள் மற்றும் பல பெறுமதியான பொருட்கள் இருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட நபர், கடந்த 28 ஆம் திகதி டோஹாவில் இருந்து கத்தார் எயார்வேஸ் விமானமான KR-632 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

அங்கு அவர் கொண்டு வந்த இரண்டு பொதிகளில் ஒன்று காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில், ஒரு மாதத்திற்குள் இந்த சூட்கேஸ் குறித்த தகவல்களை தொழிலதிபருக்கு வழங்குவதாக காவல்துறையினர் உறுதியளித்துள்ளனர்.

இதனடிப்படையில், மேற்கொண்ட விசாரணையின் பின்னர் குறித்த பெண் நேற்று கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version