Home இலங்கை குற்றம் இளம் யுவதியின் மோசமான செயல் அம்பலம்

இளம் யுவதியின் மோசமான செயல் அம்பலம்

0

போலியான பேஸ்புக் கணக்கை உருவாக்கி, நிர்வாண படங்களுடன் வேறு பெண்ணின் முகத்தை இணைத்து புகைப்படங்களை வெளியிட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட யுவதி கண்டி பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடையவராகும்.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கண்டி கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் தொடங்கப்பட்டன.

யுவதியின் மோசமான செயல்

அதற்கமைய, நடத்தப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, நிர்வாண புகைப்படங்களை வெளியிட்டதாகக் கூறப்படும் யுவதி கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். மேலும் சந்தேக நபரின் இந்த செயல் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version