அனுராதபுரத்திலிருந்து பெல்லட்டை நோக்கிச் சென்ற ரஜரட்ட தொடருந்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
ரயிலின் எஞ்சினில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
ரயிலை மீண்டும் அனுராதபுர ரயில் நிலையத்திற்கு கொண்டு சென்று தொடருந்தில் மற்றொரு எஞ்சின் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
ரயில்வே திணைக்களம்
இன்று காலை 5 மணிக்கு அனுராதபுரத்திலிருந்து புறப்படவிருந்த ரஜரட்ட தொடருந்தில் தீ விபத்து ஏற்பட்டது.
இதன் காரணமாக, ரயில் 2 மணி நேர தாமதத்தின் பின்னர் காலை 7.30 மணியளவில் பெலியட்டை நோக்கி மீண்டும் பயணத்தைத் தொடங்கியதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
