Home இலங்கை சமூகம் இரண்டு யானைகளை திருப்பி அழைக்க விரும்பும் தாய்லாந்து

இரண்டு யானைகளை திருப்பி அழைக்க விரும்பும் தாய்லாந்து

0

இலங்கைக்குப் பரிசளிக்கப்பட்ட பிளாய் பிரட்டு பா மற்றும் பிளாய் ஸ்ரீநாரோங்
ஆகிய இரண்டு யானைகளின் மோசமான பராமரிப்பு மற்றும் துன்புறுத்தல் குறித்த
முறைப்பாடுகளையடுத்து, தாய்லாந்து அரசாங்கம் எதிர்வரும் 28 ஆம் திகதியன்று
இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.

தாய்லாந்து துணைப் பிரதமரும், இயற்கை வளங்கள் மற்றும் சுற்றாடல் அமைச்சருமான
சுச்சர்ட் சோம்லின் இந்த விவகாரம் குறித்துப் பேச அவசரமாக இலங்கை வரத்
திட்டமிட்டுள்ளார்.

தாய்லாந்து  யானைகள்

யானைகள் அதிக வேலைக்கு உட்படுத்தப்படுவதாகவும், சங்கிலியால் பிணைக்கப்பட்டு,
தாக்கப்படுவதாகவும் விலங்குகள் நலக் குழுக்கள் கவலை தெரிவித்துள்ளன.

இந்த நிலையில், அந்த நாட்டின் பிரதமர் அனுட்டின் சார்ன்விரகுலுடன் இது
தொடர்பாக பேசப்பட்டுள்ளது

இதன்போது, யானைகளைத் தாய்லாந்துக்குத் திரும்பக் கொண்டுவர இராஜதந்திர
முயற்சிகளை மேற்கொள்ள அவர் அனுமதி அளித்துள்ளார்.

இந்த பேச்சுவார்த்தைகள் தொடரும் நிலையில், யானைகளின் ஆரோக்கிய நிலைமைகளை
மதிப்பிட ஒரு குழுவும் இலங்கைக்கு வரவுள்ளது.

இதேவேளை, கண்டி தலதா மாளிகை மற்றும் கதிர்காமம் கிரிவெஹெர விஹாரைக்கு அருகில்
பிளாய் பிரட்டு பா, பிளாய் ஸ்ரீநாரோங் ஆகிய யானைகள் பராமரிக்கப்படுகின்றன.

இதற்கிடையில் முன்னர் இலங்கையிலிருந்து பிளாய் சக் சுரின் யானை, மீட்கப்பட்ட
அதே மாதிரியை இந்த விவகாரத்திற்கும் பயன்படுத்த தாய்லாந்து அதிகாரிகள்
திட்டமிட்டுள்ளனர். 

NO COMMENTS

Exit mobile version