Home முக்கியச் செய்திகள் யாழ்ப்பாணத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்ட ஆறு பேர்

யாழ்ப்பாணத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்ட ஆறு பேர்

0

யாழ்ப்பாணத்தில் (Jaffna) பல்வேறு பகுதிகளில் ஹெரோயின் போதைப்பொருளை உடைமையில்
வைத்திருந்த குற்றச்சாட்டில் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆறு பேரிடமிருந்தும் எழு கிராம் ஹெரோயின் யாழ்ப்பாணம் காவல்துறையினரால்
கைப்பற்றப்பட்டது.

போதைப்பொருள் தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரப்படும்
நிலையில் யாழ்ப்பாணம் காவல்துறையினரின்  தீடீர் சோதனையின் போது கைது நடவடிக்கை
முன்னெடுக்கப்பட்டது.

மேலதிக விசாரணை

ஒரு சந்தேக நபரிடம் இருந்து மூன்று கிராம் ஹெரோயினும் ஐந்து பேரிடம் இருந்து
வெவ்வேறாக நான்கு கிராம் ஹெரோயினும் மீட்கப்பட்டது.

மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் சந்தேக நபர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை
எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

NO COMMENTS

Exit mobile version