Home இலங்கை குற்றம் பிரபல பாதாள உலகக்கும்பல் புள்ளியின் மாமியாரிடமிருந்து கைப்பற்றப்பட்ட பெருந்தொகை தங்கம்

பிரபல பாதாள உலகக்கும்பல் புள்ளியின் மாமியாரிடமிருந்து கைப்பற்றப்பட்ட பெருந்தொகை தங்கம்

0

பிரபல பாதாள உலகக்கும்பல் புள்ளியான பொடி லெசி என்பவரின் மனைவியின் தாயாரிடமிருந்து பெருந்தொகையான தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.

A எனப்படும் ஜனித் மதுசங்க டி சில்வா, தென்னிலங்கையின் முக்கிய போதைப் பொருள் வர்த்தகராகவும், பாதாள உலகக்கும்பல் புள்ளியாகவும் செயற்படுகின்றார்.

விசாரணை

இந்நிலையில் இவரது மனைவியின் தாயார் பேரில் அம்பலாங்கொடை வங்கியொன்றில் இருந்த பாதுகாப்புப் பெட்டகத்தில் ஒருகிலோ அளவிலான எடைகொண்ட தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.

சட்டவிரோத சொத்து சேகரிப்பு புலனாய்வுப் பிரிவினர் இதனைக் கைப்பற்றியுள்ளனர்.

பொடி லெசி சட்டவிரோதமாக உழைத்த பணத்தைக் கொண்டு இந்தத் தங்கம் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதா என்பதைக் குறித்து பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version