Home சினிமா கயல் சீரியல் நடிகை அமுதா தற்கொலை முயற்சி.. அதிர்ச்சி காரணம்

கயல் சீரியல் நடிகை அமுதா தற்கொலை முயற்சி.. அதிர்ச்சி காரணம்

0

சினிமா மற்றும் சின்னத்திரை நடிகர்களின் தற்கொலை என்பது தொடர்கதையான ஒன்றாக இருக்கிறது. சாய் பிரஷாந்த் தொடங்கி VJ சித்ரா வரை இப்படி ஒரு அதிர்ச்சி முடிவு எடுத்த நடிகர்கள் லிஸ்ட் மிக பெரிதாக இருக்கிறது.

தற்போது சென்னை சாலிகிராமம் பகுதியில் வசித்து வந்த சீரியல் நடிகை அமுதா என்பவர் பாத்ரூம் சுத்தம் செய்ய பயன்படுத்தும் திரவத்தை குடித்து தற்கொலை முயற்சி மேற்கொண்டு இருக்கிறார். அவரை அருகில் இருப்பவர்கள் மருத்துவமனையில் அனுமதித்து இருக்கின்றனர்.

காரணம்

பல சின்னத்திரை சீரியல்களில் நடித்து இருக்கும் அமுதா, சன் டிவி கயல் சீரியலிலும் நடித்து இருக்கிறாராம்.

அமுதா கடந்த ஒரு மாதமாக கணவரிடம் சண்டை போட்டு தனியாக தான் வசித்து வந்தாராம். இந்நிலையில் இன்று மாலை தற்கொலை முயற்சி செய்து இருக்கிறார்.

போலீசார் தற்போது இது பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

NO COMMENTS

Exit mobile version