Home இலங்கை சமூகம் அச்சுறுத்தும் மரணங்கள்…! யாழ். தொண்டைமானாறில் சடலமாக மீட்கப்பட்ட பெண்

அச்சுறுத்தும் மரணங்கள்…! யாழ். தொண்டைமானாறில் சடலமாக மீட்கப்பட்ட பெண்

0

யாழ்ப்பாணம் (Jaffna) – தொண்டைமானாறு கடல்நீரேரியில் இருந்து பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பெண்ணின் சடலம் நேற்று (12.08.2025) செவ்வாய்க்கிழமை மாலை மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மீன்பிடிக்கச் சென்ற கடற்றொழிலாளர்கள் மிதந்துகொண்டிருந்த சடலத்தை கண்டு காவல்துறை அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தகவல் வழங்கினர்.

காவல்துறையினர் விசாரணை

இதன் அடிப்படையில் அங்கு சென்ற அச்சுவேலி காவல்துறையினர் விசாரணைகளை நடத்தியதுடன் சடலத்தையும் மீட்டுள்ளனர்.

எனினும் சடலமாக மீட்கப்பட்ட பெண் தொடர்பான விவரங்கள் தெரியவரவில்லை. 

இதேவேளை யாழ். மண்கும்பான் கடற்கரை பகுதியில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கடந்த 11ஆம் திகதி மாலை மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது,

NO COMMENTS

Exit mobile version