யாழில் (Jaffna) மயங்கி விழுந்த மூன்று பிள்ளைகளின் தாயார் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் யாழ்ப்பாணம் – களபூமி காரைநகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் அதே இடத்தைச் சேர்ந்த கேதீஸ்வரன் சுசிலா (வயது 50) என்ற மூன்று பிள்ளைகளின் தயாராவார்.
பிரேத பரிசோதனை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நேற்று வியாழக்கிழமை நண்பகல் கோயிலுக்கு புறப்பட ஆயத்தமான போது அவர் மயங்கி விழுந்தார்.
உடனடியாக காரைநகர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப் பட்ட நிலையில் பிற்பகல் உயிரிழந்தார்.
இந்த மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டு பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டார். சாட்சிகளை ஊர்காவல்துறை காவ்துறையினர் நெறிப்படுத்தினர்.
