Home இலங்கை குற்றம் கொழும்பில் நண்பிக்கு அதிர்ச்சி கொடுத்த மற்றுமொரு பெண் – இப்படியும் மனிதர்கள்…

கொழும்பில் நண்பிக்கு அதிர்ச்சி கொடுத்த மற்றுமொரு பெண் – இப்படியும் மனிதர்கள்…

0

கொழும்பில் அவசர தேவைக்காக தனது நண்பியிடம் சுமார் 50 பவுண் தங்க நகைகளை அடகு வைத்து, அதிலிருந்து 1.9 மில்லியன் ரூபாவுடன் காணாமல் போன பெண்ணைக் கைது செய்ய கிரிபத்கொட பொலிஸார் விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

இந்த மோசடியில் பாதிக்கப்பட்ட ஹுனுபிட்டியவைச் சேர்ந்த பெண் ஒருவர் செய்த முறைப்பாட்டை தொடர்ந்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சந்தேக நபரை கைது செய்வதற்காக, சந்தேக நபரின் தொலைபேசி பகுப்பாய்வு அறிக்கை மற்றும் வங்கிக் கணக்கு பதிவுகளைப் பெறுமாறு மஹர நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


தங்க நகை

2 பெண்களுக்கும் இடையிலான நட்பை பயன்படுத்திக் கொண்ட சந்தேக நபர், இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் தங்க நகைகளை அடகு வைத்து, பின்னர் அவற்றைத் திருப்பித் தந்து நம்பிக்கையை வளர்த்ததாக கூறப்படுகிறது.

கடைசியாக பெற்ற தங்க நகைகளை அடகு வைத்த பிறகு, அவர் தனது நண்பியை தவிர்த்து வந்ததாக சந்தேகத்தின் பேரில் முறைப்பாடு செய்யப்பட்டது.

சந்தேக நபர் வத்தளையை சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் பெரிய சப்பரம்

NO COMMENTS

Exit mobile version