இலங்கையின் யாழ்ப்பாண அரசு கால மரவுரிமை சின்னமான யாழ் நல்லூரில் அமைந்துள்ள
மந்திரிமனை பாதுகாப்பு பணிகள் நேற்றையதினம்(16.10.2025) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் இந்தமந்திரிமனை மழை காரணமாக பகுதியளவில் இடிந்து வீழ்ந்திருந்தது.
சேதமடைந்ந வாயிற் புற கூரை
இதன் பாதுகாப்பு கருதி மந்திரிமனையின் சேதமடைந்ந வாயிற் புற கூரை கழற்றி
மழைக்கால சேதத்தினை தடுப்பதற்கான வேலைகைகள் நடைபெற்று வருகின்றன.
தொல்பொருள் திணைக்களம், காணி உரிமையாளர்கள் இணைந்து இச் செயற்பாடு
முன்னெடுக்கப்படுகின்றது.
