Home முக்கியச் செய்திகள் விஜயின் கட்சி குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவலால் பரபரப்பு

விஜயின் கட்சி குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவலால் பரபரப்பு

0

கரூர் கூட்டநெரிசல் மரணங்கள் தொடர்பான வழக்கில் தவெக அங்கீகாரம் ரத்து குறித்து தேர்தல் ஆணையம் அளித்துள்ள பதில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மாதம் 27ம் திகதி கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் செய்தபோது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்

அதை தொடர்ந்து தவெக மீது பல வழக்குகள் பல நீதிமன்றங்களில் தொடுக்கப்பட்ட நிலையில், தவெக மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இதில் சிபிஐ விசாரணை அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி மதுரையை சேர்ந்த செல்வக்குமார் என்ற வழக்கறிஞர், தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி அங்கீகாரத்தை இந்திய தேர்தல் ஆணையம் ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

 இந்திய தேர்தல் ஆணையத்தின் பதில்

இந்த வழக்கில் பதில் அளித்துள்ள இந்திய தேர்தல் ஆணையம், மனுதாரர் குறிப்பிட்ட தமிழக வெற்றிக் கழகம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் பட்டியலில் இல்லை என பதில் அளித்துள்ளது. 

NO COMMENTS

Exit mobile version