Home விளையாட்டு ஃபிஃபா வரலாற்றில் முதல்முறை சாம்பியன்ஷிப் மோதிரங்கள் – இறுதிப் போட்டியில் பங்கேற்கும் டிரம்ப்

ஃபிஃபா வரலாற்றில் முதல்முறை சாம்பியன்ஷிப் மோதிரங்கள் – இறுதிப் போட்டியில் பங்கேற்கும் டிரம்ப்

0

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில், வெற்றி பெறும் அணிக்கு முதல் முறையாக “சாம்பியன்ஷிப் மோதிரங்கள்” வழங்கப்படவுள்ளதாக ஃபிஃபா அறிவித்துள்ளது.

திங்கட்கிழமை அதிகாலை நியூயார்க்கிலுள்ள மெட்லைஃப் மைதானத்தில் நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில், ஸ்பெயினும் அர்ஜென்டினாவும் மோதவுள்ளன.

அரையிறுதியில் பிரான்ஸை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ஸ்பெயின் அணியும், இங்கிலாந்தை 2-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்த அர்ஜென்டினா அணியும் மோதவுள்ளன.

வரலாற்றில் முதன்முறையாக

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இறுதிப் போட்டியில் பங்கேற்று உலகக் கோப்பையை வழங்குவார் என வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது.  

உலகக் கோப்பை வரலாற்றில் முதன்முறையாக, தங்கப் பதக்கங்களுடன் வைரங்கள் பதிக்கப்பட்ட பிரத்யேக மோதிரங்களும் சாம்பியன் அணிக்கு வழங்கப்படவுள்ளன.

மொத்தம் 2,026 வரையறுக்கப்பட்ட பதிப்பு மோதிரங்களில், 30 மோதிரங்கள் சாம்பியன் அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ளவை ரசிகர்களுக்காக வெளியிடப்படவுள்ளன.

பெரும் எதிர்பார்ப்பு

மேலும், 39 வயதான லியோனல் மெஸ்ஸிக்கும், ஸ்பெயினின் இளம் நட்சத்திரம் லமின் யமாலுக்கும் இடையிலான முதல் சர்வதேச மோதலாகவும் இந்தப் போட்டி அமையவுள்ளது.

தொடர்ச்சியாக இரண்டாவது உலகக் கோப்பையை வெல்லும் இலக்குடன் அர்ஜென்டினாவும், புதிய சாம்பியனாக உருவெடுக்கும் நோக்கில் ஸ்பெயினும் களமிறங்குவதால், இறுதிப் போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source: https://ibctamil.com/article/world-cup-winners-receive-championship-rings-1784339355

NO COMMENTS

Exit mobile version