Home விளையாட்டு ரி20 உலகக்கோப்பை: முதல் வெற்றியை பதிவு செய்த இந்திய அணி

ரி20 உலகக்கோப்பை: முதல் வெற்றியை பதிவு செய்த இந்திய அணி

0

புதிய இணைப்பு

2024 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 8வது போட்டி இன்று (05) இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்றது.

இந்த போட்டியில்  இந்தியா ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய அயர்லாந்து அணியால் 96 ஓட்டங்களை மாத்திரமே எடுக்க முடிந்தது.

இதனையடுத்து, இந்திய அணி 12 ஓவர்கள் 2 பந்துகள் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து அந்த இலக்கை எட்டி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

வெற்றியின் பின்னர் இலங்கை தொடர்பில் மோடி வெளியிட்ட கருத்து

இரண்டாம் இணைப்பு

முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி 16 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 96 ஓட்டங்களை பெற்றது.

இந்திய அணி சார்பாக சிறப்பாக பந்துவீசிய ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுக்களையும் ஹர்ஷிதீப் சிங் 2 விக்கெட்டுக்களையும் பும்ராஹ் 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

கனடாவில் வீடு விற்பனை: முக்கிய நகரமொன்றின் தற்போதைய நிலை

முதலாம் இணைப்பு

நடைபெற்று வரும் இருபதுக்கு இருபது உலகக்கிண்ணத் தொடரில் இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

இந்த போட்டி இன்று (5) இரவு 8.00 மணிக்கு நியூயோர்க்கில் ஆரம்பமாகவுள்ளது.

போட்டி தொடங்கும் முன் அணியின் வீரர்களுடன்  உத்வேகம் அளிக்கும் வகையில் உரையை இம்முறை அணித்தலைவர் ரோஹித் சர்மா (Rohit Sharma), விராட் கோஹ்லிக்கு வழங்கியுள்ளார்.

லங்கா பிரிமியர் லீக் தொடரில் களமிறங்கும் அமெரிக்க நிறுவனம்

இந்திய அணி

இந்நிலையில், போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்திருந்தது.

இதன்படி அயர்லாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரி 20 உலக கோப்பை:ஸ்காட்லாந்து அணியை எதிர்த்து இங்கிலாந்து அணி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்..

NO COMMENTS

Exit mobile version