Home விளையாட்டு தலைகீழாக மாறிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை

தலைகீழாக மாறிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை

0

இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி நியூசிலாந்து அணியை 115 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தியுள்ளது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இங்கிலாந்து அணியில் மீண்டும் சேர்க்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் Ollie Robinson-இன் சிறப்பான பந்துவீச்சு, இங்கிலாந்தின் வெற்றியை எளிதாக்கியுள்ளது.

இதன்படி நியூசிலாந்து அடைந்த இந்தப் பெரும் தோல்வியால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) புள்ளிப் பட்டியல் முற்றிலும் மாறியுள்ளது.

இலங்கை அணி

இதுவரை இரண்டாம் இடத்தில் இருந்த நியூசிலாந்து நான்காம் இடத்திற்குப் பின்தங்கியுள்ளது.

இதனைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, தென்னாப்பிரிக்க அணி புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இந்த மாற்றத்தின் மூலம், இலங்கை அணியும் புள்ளிப் பட்டியலில் ஒரு இடம் முன்னேறி மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது.

Source: https://ibctamil.com/article/world-test-championship-rankings-reversed-1780912600

NO COMMENTS

Exit mobile version