கண்டி – யட்டிநுவர பிரதேசசபை தலைவரின் உயிர்மாய்ப்பு, அவரது மனைவி
மற்றும் மகள் கொலை தொடர்பான விசாரணைகள் கண்டியில் உள்ள ஒரு கடன் வழங்குநரை
மையப்படுத்தி மேற்கொள்ளப்படுகின்றன.
பிரதேசசபை எதிர்க்கட்சித் தலைவர் சம்பிக்க நிலந்த தனது மனைவி மற்றும்
குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்த பின்னர் தாம் உயிரை மாய்த்துக் கொண்டதாக கூறப்படும் சம்பவம் அண்மையில் நிகழ்ந்தது.
கடன் வழங்குநர் விசாரணை
இதன்போது அவர் எழுதி வைத்திருந்த தற்கொலைக்கான குறிப்பின் ஆரம்ப
கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் பொலிஸார் கடன் வழங்குநரை விசாரித்ததாக
கூறப்படுகிறது.
குறித்த பணம் வழங்குபவர், பரிவர்த்தனைகள் சரியான நேரத்தில் தீர்க்கப்படாமை
குறித்து பிரதேசசபையின் எதிர்க்கட்சி தலைவரை மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
இதேவேளை எதிர்க்கட்சி தலைவரின் தற்கொலைக் குறிப்பில் பெயர் காணப்பட்ட
கண்டியில் உள்ள ஒரு மூத்த அத்தியட்சகர் ஒருவர் விசாரணையின் பின்னர்
விடுவிக்கப்பட்டதாக அறியப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
