Home முக்கியச் செய்திகள் பிரதமர் ஹரிணி நல்லூரில் பார்த்து வியந்த மணல் சிற்பம்!

பிரதமர் ஹரிணி நல்லூரில் பார்த்து வியந்த மணல் சிற்பம்!

0

யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோயிலில் அமைக்கப்பட்டிருந்த மணல் சிற்பத்தைப் பார்த்து பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) வியப்படைந்துள்ளார்.

நல்லூர் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முருகனின் முகத்தினை பிரதிபலிக்கும் மணல் சிற்பத்தினை பிரதமர் ஆச்சரியமாக பார்வையிட்டார்.

யாழ்ப்பாணத்திற்கு நேற்று (02) விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் இன்று (03) காலை நல்லூர் ஆலயத்திற்கு விஜயம் செய்திருந்தார்.

மணல் சிற்பம் 

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் நடைபெற்று வரும் நிலையில் பிரதமர் நல்லூரில் வழிபாடுகளில் ஈடுபட்டார்.

இதனைத் தொடர்ந்து ஆலய முன்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மணல் சிற்பத்தைப் பார்வையிட்டார்.

பிரதமரின் நல்லூர் விஜயத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன், மற்றும் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

நல்லூர் கோயிலுக்கான பிரதமரின் வருகையை முன்னிட்டு ஆலய வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/hqOjwqvfk38

NO COMMENTS

Exit mobile version