Home சினிமா தோனிக்கும் அது வராது.. நடிகர் யோகிபாபுவிடம் அவரே சொன்ன அந்த விஷயம்

தோனிக்கும் அது வராது.. நடிகர் யோகிபாபுவிடம் அவரே சொன்ன அந்த விஷயம்

0

யோகி பாபு

நடிகர் யோகி பாபு கோலிவுட்டில் முக்கிய காமெடியன்களில் ஒருவர். இவர் தற்போது அஜித், விஜய், ரஜினி என பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடியனாக நடிப்பது மட்டுமின்றி கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வருகிறார்.

கடைசியாக இவர் நடிப்பில் குட் பேட் அக்லி, டூரிஸ்ட் ஃபேமிலி, லெக் பீஸ், சுமோ, ஏஸ் என பல படங்கள் வந்தன.

கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தமிழில் LGM என்ற படத்தை தயாரித்தார். அதில் ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடிக்க, யோகிபாபு முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார்.

அந்த நடிகருடன் இணைந்து நடிக்க ஆசை.. நடிகை த்ரிஷா உடைத்த ரகசியம்

அந்த விஷயம்

இந்நிலையில், தோனி குறித்து யோகி பாபு பகிர்ந்த விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில், ” LGM படத்தின் விழாவில் தோனிக்கு அருகில் ஒரு சீட் காலியாக இருந்தது. அப்போது சாக்‌ஷி என்னை அழைத்து தோனி அருகில் இருக்கும் இருக்கையில் அமர சொன்னார்.

அப்போது நான் தோனியிடம், சாரி சார் எனக்கு ஆங்கிலம் வராது என்றேன். உடனே எனக்கும் ஒழுங்காக வராதுதான். அதற்காக கவலைப்பட வேண்டாம். நீங்களும், நானும் ஜெட் வேகத்தில் போய்க்கொண்டிருக்கிறோம். அதுதான் வேண்டும்’ என்று கூறினார். அவர் ஒரு அற்புதமான மனிதர்” என்று தெரிவித்துள்ளார்.    

NO COMMENTS

Exit mobile version