Home இலங்கை குற்றம் யோஷித மற்றும் டெய்சிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

யோஷித மற்றும் டெய்சிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

0

முறைகேடாக சொத்து சேர்த்த விவகாரம் தொடர்பில் யோஷித ராஜபக்சவுக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள வழக்கு செப்டம்பர் வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டி டெய்சி பாரஸ்ட் ஆகியோருக்கு எதிராக குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மீண்டும் விசாரணைக்கு..

சுமார் 73 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை முறைகேடாகப் பயன்படுத்தியதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் செப்டம்பர் 22 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

NO COMMENTS

Exit mobile version