Home முக்கியச் செய்திகள் பயங்கர ஆயுதங்களுடன் பெண்ணொருவர் கைது

பயங்கர ஆயுதங்களுடன் பெண்ணொருவர் கைது

0

பண்டாரவளையில் உள்ள ஒரு வீட்டில் இருந்து இரண்டு கைத்துப்பாக்கிகள், தோட்டாக்கள் மற்றும் இரண்டு தடைசெய்யப்பட்ட கத்திகளுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பண்டாரவளை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின்படி குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, அலுமாரியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மேற்கூறிய ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

மேலதிக விசாரணை

கண்டுபிடிக்கப்பட்ட ஆயுதங்களில் 30 தோட்டாக்களுடன் கூடிய இரண்டு வெளிநாட்டுத் தயாரிப்பு கைத்துப்பாக்கிகள், ஒரு துப்பாக்கி உறை, ஒரு மெகசின் மற்றும் இரண்டு தடைசெய்யப்பட்ட கத்திகள் ஆகியவை அடங்கும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துயைினர் மேற்கொண்டுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version