கடந்த காலங்களில் கட்சிகளை பிரித்து தேர்தலில் வெற்றி பெற முடியும் எனவும், ஆனால் தற்போது அவ்வாறு வெற்றி பெற முடியாது எனவும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச(namal rajapaksa) தெரிவித்துள்ளார்.
கட்சிகளை பிரித்து தேர்தலில் வெற்றி பெறுவது காலாவதியான உத்தி என்று அவர் கூறினார்.
அதீத தோல்வி
2019 ஆம் ஆண்டு கட்சி பிளவுபட்டதன் காரணமாக ஐக்கிய தேசியக் கட்சிக்கு பரம்பரையாக கிடைத்த அதீத தோல்வியை நாம் சிந்திக்க வேண்டும் எனவும், கட்சி பிளவுபட்டால் தேர்தல் தோல்வியை நிச்சயம் சந்திக்க நேரிடும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சி பிளவு
இன்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் பிளவுபட்டுள்ளதாகவும், கட்சிகளை பிளவுபடுத்துவதல்ல ஒன்றிணைந்து வலுவாக நிற்பதையே செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.