ஜனநாயகன்
விஜய்யின் ஜனநாயகன், இனி இந்த படத்தின் பேச்சு தான் தமிழ் சினிமாவில் அதிகமாக இருக்கப்போகிறது.
மலேசியாவில் பிரம்மாண்டமாக நடக்கப்போகும் ஆடியோ வெளியீட்டு விழா, படத்தின் வியாபாரம், ப்ரீ புக்கிங் என இப்படி தான் படம் குறித்து ரசிகர்கள் அதிகம் பேசப்போகிறார்கள்.
அனிருத் இசையமைப்பில் தயாராகியுள்ள ஜனநாயகன் படத்தின் முதல் சிங்கிள் வெளியாகியுள்ள நிலையில் அடுத்த பாடல் நாளை (டிசம்பர் 18) வெளியாகவுள்ளது.
2வது சிங்கிள் ரிலீஸ் தொடர்ந்து மலேசியாவில் ஆடியோ வெளியீட்டு விழா, அதன்பின் ஜனவரி 9 ரிலீஸ்.
ஸ்ரீலீலா
படம் குறித்த விஷயங்கள் நிறைய பேசப்பட்டு வரும் நிலையில் ஜனநாயகன், தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளிவந்த பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் என சமூக வலைதளங்களில் பேசப்படுகிறது.
இதுகுறித்து அப்படத்தில் நடித்த நடிகை ஸ்ரீலீலாவிடம் கேட்டுள்ளனர். அதற்கு அவர், பகவந்த் கேசரி ரீமேக்கானு தெரியாது. நானும் விஜய் ரசிகை தான், படத்தை பார்க்க ரொம்ப ஆவலாக இருக்கிறேன் என கூறியுள்ளார்.
