Home இலங்கை சமூகம் யாழ்ப்பாணத்தில் எலி காய்ச்சலால் இளம் குடும்பஸ்தர் மரணம்

யாழ்ப்பாணத்தில் எலி காய்ச்சலால் இளம் குடும்பஸ்தர் மரணம்

0

யாழ்ப்பாணத்தில் (Jaffna) எலிகாய்ச்சல் காரணமாக இளம் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கலைவாணி வீதி – துணைவி சங்கரத்தை பகுதியை சேர்ந்த சிறீஸ்காந்திராசா சிவாஸ்கர் (வயது 34) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், இவருக்கு கடந்த 21ஆம் திகதி காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் 22ஆம் திகதி சங்கானை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

யாழ். போதனை வைத்தியசாலை

அதன் பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பணம் போதனை வைத்தியசாலை சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் (24.0.2024) உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளார்.

எலிகாய்ச்சல் காரணமாகவே குறித்த மரணம் இடம்பெற்றுள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

Source: https://ibctamil.com/article/young-family-men-death-in-jaffna-1729828265

NO COMMENTS

Exit mobile version