Home இலங்கை அரசியல் அச்சுவேலி கைத்தொழில் பேட்டைக்கு விஜயம் செய்த அரசியல் கட்சிகளின் இளம் தலைவர்கள்

அச்சுவேலி கைத்தொழில் பேட்டைக்கு விஜயம் செய்த அரசியல் கட்சிகளின் இளம் தலைவர்கள்

0

இலங்கை தமிழரசு கட்சியின் அழைப்பின் பேரில் தென்னிலங்கையைச் சேர்ந்த அரசியல் கட்சிகளின் இளம் தலைவர்கள் இன்றையதினம்(02) அச்சுவேலி கைத்தொழில் பேட்டைக்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டனர்.

14 அரசியல் கட்சிகளைபிரதிநிதித்துவப்படுத்தும் இளம் அரசியல் தலைவர்கள் குழு குறித்த விஜயத்தினை மேற்கொண்டிருந்தது.

வடக்கின் பொருளாதார நிலைமை

இவ்விஜயத்தின் போது வடக்கு மாகண மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் கள விஜயங்கள் மேற்கொள்ளும் நோக்கத்துடன் வருகைதந்த குறித்த குழுவினர் நேற்றையதினம்(01) யாழ்ப்பாணத்திலிருந்து காங்கேசன்துறை வரை புகையிரதத்தில் பயணித்து காங்கேசன்துறை துறைமுகம், மயிலிட்டி மீன்பிடித்துறைமுகம் மற்றும் பலாலி விமான நிலையம் ஆகியவற்றுக்குச் சென்று அங்குள்ள அபிவிருத்தி நிலைமைகள் தொடர்பாக ஆராய்ந்தனர்.

இன்றையதினம் அச்சுவேலி கைத்தொழிற்பேட்டைக்கு விஜயம் மேற்கொண்டு கைத்தொழில் நிலமைகள் தொடர்பில் பார்வையிட்டனர்.

வடக்கின் பொருளாதார நிலைமைகள் தொடர்பாக ஆராயும் முகமாக குறித்த விஜயம் இடம்பெற்றுள்ளது.

சுமந்திரனிடம் கேள்வி

இன்றைய கைத்தொழில்பேட்டை விஜயத்தின் போது எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைத்துப்பாக்கி கோரியமை தொடர்பாக சுமந்திரனிடம் ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பினர்.

இதற்கு பதிலளித்த சுமந்திரன், கைத்துப்பாக்கிகளை பாவிக்கத் தெரியாதவர்களுக்கு வழங்கினால் விபரீதம் நிகழும் எனவும் இது தொடர்பில் எதுவும் கூறமுடியாது. என்றார். 

NO COMMENTS

Exit mobile version