Home முக்கியச் செய்திகள் மேம்பாலத்தின் கீழ் இளைஞனின் சடலம் : கொலை என காவல்துறை சந்தேகம்

மேம்பாலத்தின் கீழ் இளைஞனின் சடலம் : கொலை என காவல்துறை சந்தேகம்

0

அங்குணுகொலபெலஸ்ஸ – அபேசேகரகம வீதியில், கீரியகொடெல்ல சந்தியில், அதிவேக நெடுஞ்சாலைக்கு அருகிலுள்ள மேம்பாலத்தின் கீழ்  இளைஞர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் இன்றைய தினம் (13.03.2025)  கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணை

சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் கொலை செய்யப்பட்டு பாலத்திலிருந்து வீசப்பட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

உயிரிழந்தவர் 23 வயதுடைய அபேசிங்க விஜேநாயக்க சந்தீப லக்‌ஷான் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த மர்ம மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அங்குணுகொலபெலஸ்ஸ காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version