எதிர்வரும் பொதுத் தேர்தலில் சில முக்கிய முன்னாள் அமைச்சர்கள் போட்டியிடப் போவதில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, முன்னாள் ராஜாங்க அமைச்சர்களான பிரமித பண்டார தென்னக்கோன் மற்றும் செஹான் சேமசிங்க ஆகியோரும் எதிர்வரும் பெர்துத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என தீர்மானித்துள்ளனர்.
இந்த மூன்று அமைச்சர்களுக்கும் நெருக்கமான தரப்புக்கள் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளன.
அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை
தேர்தலில் போட்டியிடா விட்டாலும் தொடர்ந்தும் செயற்பாட்டு அரசியலில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், இந்த மூவரும் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பிலான தங்களது நிலைப்பாட்டை இதுவரையில் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.
போட்டியிடப் போவதில்லை
இதேவேளை, முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தனது சட்டம் சார் தொழிலுக்குத் திரும்பியுள்ளதுடன் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை எனவும் உறுதிப்படுத்தியுள்ளார்.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.
நீதி மறுசீரமைப்பு மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சராக பதவி வகித்த விஜேதாச ராஜபக்ச, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு படுதோல்வியைத் தழுவிக் கொண்டார்.
இந்நிலையில் எதி்ர்வரும் பொதுத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்று அவர் அறிவித்துள்ளார்.