இலங்கை தமிழரசுக் கட்சியின் அழைப்பின் பேரில் தென்னிலங்கையைச் சேர்ந்த அரசியல்
கட்சிகளின் இளம் தலைவர்கள் இன்றையதினம் (02.11.2025) அச்சுவேலி கைத்தொழில் பேட்டைக்கான
விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.
14 அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இளம் அரசியல் தலைவர்கள் குழு
குறித்த விஜயத்தினை மேற்கொண்டிருந்தது.
இந்த விஜயத்தின் போது, வடக்கு மாகாண மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில்
கள விஜயங்கள் மேற்கொள்ளும் நோக்கத்துடன் வருகைதந்த குறித்த குழுவினர், நேற்றையதினம் யாழ்ப்பாணத்திலிருந்து காங்கேசன்துறை வரை புகையிரதத்தில்
பயணித்து காங்கேசன்துறை துறைமுகம், மயிலிட்டி கடற்றொழில் துறைமுகம் மற்றும்
பலாலி விமான நிலையம் ஆகியவற்றுக்குச் சென்று அங்குள்ள அபிவிருத்தி நிலைமைகள்
தொடர்பாக ஆராய்ந்துள்ளனர்.
பொருளாதார நிலைமைகள்
அச்சுவேலி கைத்தொழிற்பேட்டைக்கு இன்றையதினம் விஜயம் மேற்கொண்டு கைத்தொழில்
நிலைமைகள் தொடர்பில் பார்வையிட்டுள்ளனர்.
வடக்கின் பொருளாதார நிலைமைகள் தொடர்பாக ஆராயும் முகமாகவும் குறித்த விஜயம்
இடம்பெற்றுள்ளது.
