முன்கோபம் கொண்ட இளைஞன் ஒருவர், சடுதியான ஆவேசம் காரணமாக தனது மூத்த சகோதரரை கூரிய கத்தரியால் குத்திக் கொலை செய்துள்ளார்.
இரத்தினபுரி (Ratnapura) மாவட்டத்தின் குருவிட்ட பிரதேசத்தில் இன்று (29.04.2024) காலை இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
17 மற்றும் 19 வயதான உடன்பிறந்த சகோதரர்களான இளைஞர்கள் இருவருக்கு மத்தியில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் கோபமடைந்த இளைஞன், கூரிய கத்தரியினால் தனது மூத்த சகோதரரை சரமாரியாகக் குத்தியுள்ளார்.
சந்தேகநபர் கைது
இதனையடுத்து, உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட 19 வயதான மூத்த சகோதரன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் 17 வயதுடைய இளைஞர் குருவிட்ட பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
Source: https://tamilwin.com/article/younger-brother-stabbed-elder-brother-1714393998
