கம்பஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொடுவாதெனிய பிரதேசத்தில் ஐஸ் போதைப் பொருளை தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை (22) மாலை கம்பஹா மாகேவிட பிரதேச்தைச் சேர்ந்த 27 வயதான குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டதாக கம்பஹா பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்
அவரிடம் இருந்து 30 கிராம், 126 மில்லிகிராம் எடையுடைய ஐஸ் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கம்பஹா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், திங்கட்கிழமை காலையில் குறித்த இளைஞனை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக அறிவித்துள்ளனர்.