Home சினிமா விடாமுயற்சி ப்ரீ புக்கிங்.. வாரிக்குவிக்கப்படும் வசூல், மாஸ் ஓப்பனிங்

விடாமுயற்சி ப்ரீ புக்கிங்.. வாரிக்குவிக்கப்படும் வசூல், மாஸ் ஓப்பனிங்

0

அஜித் குமார்

தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கிறார் அஜித் குமார். இவர் நடிப்பில் அடுத்ததாக ரிலீஸாக இருக்கும் திரைப்படம் விடாமுயற்சி.

லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது தாக்குதல்.. சர்ச்சைக்கு நடுவில் பரபரப்பு

நேற்று இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்தது என இயக்குனர் மகிழ் திருமேனி, அஜித்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். 2025 பொங்கலுக்கு வெளிவரவிருக்கும் விடாமுயற்சி திரைப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

ப்ரீ புக்கிங் 

இந்த நிலையில், விடாமுயற்சி படத்தின் ப்ரீ புக்கிங் UK மற்றும் அயர்லாந்தில் துவங்கியுள்ளது. 700 டிக்கெட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில், ரூ. 10.35 லட்சம் வசூல் செய்யப்பட்டுள்ளது. ப்ரீ புக்கிங்கில் விடாமுயற்சி படத்திற்கு நல்ல வரவேற்பை கிடைத்துள்ளது. இதனால் முதல் நாள் மாபெரும் வசூலை எதிர்பார்க்கலாம்.

NO COMMENTS

Exit mobile version