Home இலங்கை குற்றம் யாழில் போதைப்பொருளுடன் இளைஞர் கைது

யாழில் போதைப்பொருளுடன் இளைஞர் கைது

0

யாழ்ப்பாணம்(Jaffna) – திருநெல்வேலி தபால் பெட்டி சந்தியருகில் கேரள கஞ்சாவுடன் இளைஞர்
ஒருவர் இன்று(12) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

விசுவமடுவைச் சேர்ந்த 37 வயதான இளைஞர் ஒருவரே யாழ். மாவட்ட குற்றத் தடுப்பு
பிரிவினரால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இளைஞர் கைது

சந்தேக நபரிடம் இருந்து ஒரு கிலோ 345 கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன் குறித்த நபர் பயணித்த மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால்
கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேக நபரை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார்
நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Source: https://tamilwin.com/article/youth-arrested-with-kerala-ganja-in-jaffna-1736671706

NO COMMENTS

Exit mobile version