Home இலங்கை அரசியல் நாட்டில் அடுத்த சில நாட்களில் நடக்கவிருக்கும் சதித்திட்டம்…!

நாட்டில் அடுத்த சில நாட்களில் நடக்கவிருக்கும் சதித்திட்டம்…!

0

நாட்டில் அடுத்த சில நாட்களில் நடக்க இருக்கும் சதித்திட்டம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க ( Anura Kumara Dissanayake) கருத்து வெளியிட்டுள்ளார். 

ஜனாதிபதித் தேர்தலில் 50 வீதத்திற்கு மேற்பட்ட வாக்குகளை பெற்று கொள்வேன் என்றும் அநுரகுமார குறிப்பிட்டுள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நேற்று (16) கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

சஜித்தின் முகாமில் இருந்து வரும் அச்சுறுத்தல்கள்

தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், “இந்த தேர்தல் பிரச்சாரத்தில் எங்கள் நோக்கம் அதிகாரத்தை கைப்பற்றுவது தான். 

எங்களுடைய உண்மைகளை மீண்டும் மீண்டும் முன்வைப்பதுடன், அரசாங்கம் மற்றும் சஜித்தின் முகாமில் இருந்து வரும் அச்சுறுத்தல்கள் மற்றும் சாத்தியமான சதித்திட்டங்கள் பற்றிய உண்மைகளை சமூகத்திற்கு முன்வைக்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

நம் நாட்டில் பல சமயங்களில் தேர்தல் பணிகள் இப்படியே நடந்தாலும் எதிர்பாராத நிகழ்வுகள் நடப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். எனவே பொதுமக்கள் மத்தியில் ஊகங்கள் எழுந்துள்ளன.

கலவரம் ஏற்படுவதற்கான அபாயம்

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இரு சந்தர்ப்பங்களில் கலவரம் ஏற்படுவதற்கான அபாயம் பற்றி கூறியுள்ளார்.

அவ்வாறே ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திலும் ஒரு சம்பவம் பதிவாகியிருப்பதைப் பார்த்தோம். எனவே, சதி செய்தாவது சமூகத்தில் மோதல் சூழ்நிலையை உருவாக்கலாம் என்ற எதிர்பார்ப்பு அவர்களுக்கு இருக்கலாம்.

அதை வெளிப்படுத்துவதும், எங்கள் உறுப்பினர்களை எந்த வகையிலும் இதுபோன்ற மோதலில் ஈடுபட வேண்டாம் என்பதும், மோதல் ஏற்பட்டால் பொலிஸாரும் ஆயுதப்படைகளும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அதிகாரங்களுக்குள் இதுபோன்ற விடயங்கள் ஏற்படுவதை தடுக்க வேண்டும் என அநுரகுமார குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version