Home இலங்கை அரசியல் சஜித்தின் ஆட்சியில் தமிழ் மக்களுக்கு காத்திருக்கும் ஏமாற்றம்: எஸ்.பி.திஸாநாயக்க விசனம்

சஜித்தின் ஆட்சியில் தமிழ் மக்களுக்கு காத்திருக்கும் ஏமாற்றம்: எஸ்.பி.திஸாநாயக்க விசனம்

0

வடக்கில் மாகாண சபை முறைமை அமைவதை ரணசிங்க பிரேமதாச கடுமையாக எதிர்த்திருந்த நிலையில், தற்போது வடக்கு கட்சிகள் அவரது மகன் சஜித் பிரேமதாசவை ஆதரித்து ஏமாற்றததையே சம்பாரிக்க போகின்றனர் என எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

22ஆம் திகதி ஒருவேளை சஜித் பிரேமதாச தெரிவு செய்யப்பட்டால் அவருக்கு வாக்களிக்குத் தமிழ் மக்களுக்கு ஏமாற்றம் காத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

ஜனாதிபதித் தேர்தல் 

ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் மக்களுக்கு வாக்குறுதியளித்த விடயங்களுக்கு மேலதிகமாக உதவி தொகைகளை பெற்றுத்தருவதாக சஜித் தெரிவித்துள்ளார்.

நாட்டின் ஜனாதிபதியாக அவர், பதவியேற்றால், இந்த தொகையை எங்கிருந்து திரட்டப்போகின்றார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1700 ரூபாவாக அதிகரிப்பதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மிகப்பெரும் விருப்பமாக இருந்தது.

மக்கள் போராட்டம் 

அதற்காகவே அது வர்த்தமானியில் வெளியிடப்பட்டது. ஆனால் தோட்ட முதலாளிகள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

வீடமைப்பு அமைச்சராக இருந்த சஜித் இந்த தோட்டத்தில் வீடு ஒன்றை கட்டினாரா? இந்த நாட்டின் நிலை என்ன தெரியுமா, எரிவாயு இல்லை, எரிபொருள் இல்லை, பால் இல்லை, இவற்றைக் கொண்டு வர பணம் இல்லை, மக்கள் வீதியில் இறங்கி போராடினார்கள்.

ரணில் சிங்களம், தமிழ், முஸ்லிம் என அனைவரையும் நேசிக்கும் நபர். எனவே அவர் மீண்டும் ஜனாதிபதியாக நியமிக்கப்பட வேண்டும்” என்றார்.

NO COMMENTS

Exit mobile version