Home முக்கியச் செய்திகள் தமிழர் பகுதியில் இளைஞர் மீது கோர தாக்குதல்!

தமிழர் பகுதியில் இளைஞர் மீது கோர தாக்குதல்!

0

வவுனியா, தவசிகுளம் பகுதியில் விளையாட்டு மைதானத்தில் வைத்து இளைஞர் ஒருவர்
மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்றைய தினம் (03.2025) இடம்பெற்றுள்ளது.

காவல்துறை விசாரணை

இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், “வவுனியா, தவசிகுளம் பகுதியில் இரண்டு அணிக்களுக்கிடையில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றுள்ளது.

இதன்போது குறித்த மைத்தானத்திற்குள் வந்த சிலர் விளையாட்டில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தியதுடன், விளையாட்டு நிகழ்வுக்கு வழங்கப்படவிருந்த வெற்றிக் கிண்ணங்கள் மற்றும் கதிரைகளையும் உடைத்துள்ளனர்.

காயமடைந்த இளைஞர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், வவுனியா காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

NO COMMENTS

Exit mobile version