திருகோணமலை குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இறக்கக் கண்டி கடல் பகுதியில் கடற்றொழிலுக்கு சென்ற இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி பலியானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் இன்றையதினம்(21.08.2025) இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு
உயிரிழந்தவர் இறக்ககக் கண்டி வாழை ஊத்து பகுதியை சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
உயிரிழந்தவரின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில்
வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
சம்பவம் தொடர்பான மேலதிக
விசாரணைகளை குச்சவெளி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
