வாக்களிப்பு நிலையம் முன்பாக இரண்டு இளைஞர்கள் வாள் மற்றும் கத்தியுடன் நின்ற நிலையில் கைது
செய்யப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி(kilinochchi) காவல்துறை பிரிவுக்குட்பட்ட செல்வா நகர் பகுதியில் அமைந்திருந்த வாக்களிப்பு
நிலையத்துக்கு முன்பாகவே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சந்தேகத்திற்கிடமாக நின்ற கார் மீது சோதனை
வாக்குச்சாவடிக்கு முன்பாக சந்தேகத்திற்குரிய வகையில் நின்ற கார் ஒன்றை காவல்துறையினர், இன்று செவ்வாய்க்கிழமை (06) சோதனையிட்ட போது
அதனுள் வாள் ஒன்றும் கத்தி ஒன்றும் காணப்பட்டுள்ளது.
காரில் இருந்து வாள்,கத்தி மீட்பு
இதையடுத்து காரில் வந்த இரண்டு இளைஞர்களும் கைது செய்யப்பட்டதுடன், வாளும் கத்தியும் கைப்பற்றப்பட்டு, அவர்களது காரும் காவல் நிலையத்திற்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்த காவல்துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
